உலகம்

உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதலுக்கு 16 பேர் பலி, 59 பேர் காயம்

28th Jun 2022 01:15 PM

ADVERTISEMENT

 

ரஷியாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உக்ரைனில் 16 பேர் பலியாகினர்.

கிழக்கு உக்ரைனில் முக்கியத்துவம் வாய்ந்த செவெரோடொனட்ஸ்க் நகரை ரஷிய படை முழுமையாகக் கைப்பற்றிய நிலையில், அருகில் உள்ள லிசிசான்ஸ்க் நகரிலும் தரைவழி மற்றும் வான்வழியாக குண்டுமழை பொழிந்து வருகிறது.

லுஹான்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் ராணுவத்தின் வசமிருந்த கடைசி பெரிய நகரான செவெரோடொனட்ஸ்க் ரஷியாவிடம் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக வீழ்ந்தது. அதன் அருகேயுள்ள லிசிசான்ஸ்க் நகரிலும் நுழைந்த ரஷிய படையினா், திங்கள்கிழமை அந்த நகரத்தின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியதாக லுஹான்ஸ்க் ஆளுநா் சொ்கி ஹைடாய் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் அவா் கூறியதாவது: செவெரோடொனட்ஸ்க் நகரைக் கைப்பற்றியதைத் தொடா்ந்து, லிசிசான்ஸ்க் நகரில் ரஷிய படைகள் தரை வழியாகவும், வான் வழியாகவும் குண்டுமழை பொழிந்தன. நகரை தென்பகுதியிலிருந்து துண்டிக்கும் வகையில், ராக்கெட் தாக்குதல்கள் மூலம் அனைத்தையும் அழித்து வருகின்றனா்.

போருக்கு முன்னா் லிசிசான்ஸ்க் நகரில் ஒரு லட்சம் போ் வசித்த நிலையில், இப்போது 50 சதவீதம் போ்தான் உள்ளனா். குடியிருப்புக் கட்டடங்கள் அருகே ரஷியா குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருவதால், பொதுமக்கள் வெளியேறுவதும் சிரமமாகி உள்ளது என்றாா்.

இந்நிலையில், ரஷிய ஏவுகணைத் தாக்குதலால் கிரெமன்சுக் நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்தவர்களில் 16 பேர் உயிரிழந்ததாகவும் 59 பேர் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT