உலகம்

அமெரிக்காவில் கண்டெய்னர் லாரியில் 46 உடல்கள்; என்ன நடந்தது?

28th Jun 2022 08:54 AM

ADVERTISEMENT


சான் ஆன்டோனியா: அமெரிக்காவின் சான் ஆன்டோனியா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியிலிலுந்து 46 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க நேரப்படி, திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியிலிருந்து அழுகுரல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையும் படிக்க.. ரோட்டுக் கடையில் சாப்பிடுகிறவரா நீங்கள்? ஆபத்தை அறிந்துகொள்ள...

விரைந்து வந்த காவல்துறையினர், கண்டெய்னர் லாரியை திறந்து பார்த்தபோது, அங்கே 46 பேர் சடலங்களாகக் கிடந்தனர். 16 பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். உடனடியாக மீட்புப் பணிகள் நடைபெற்றது. மீட்கப்பட்ட 16 பேரில் 12 பேர் பெரியவர்கள். 4 பேர் குழந்தைகள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

18 சக்கரம் கொண்ட அந்த கண்டெய்னர் லாரி மூலம், வெளிநாடு தப்ப நினைத்த 100க்கும் மேற்பட்ட அகதிகள், கண்டெய்னருக்குள் காற்று இல்லாமை மற்றும் வெப்பம் காரணமாக உயிரிழந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்குள் அகதிகளாக வந்து, அங்கிருந்து  வெளிநாடுகளுக்குத் தப்ப முயல்பவர்கள், இதுபோன்று பலியாகும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT