உலகம்

ஈரான் இரும்பு ஆலையில்சைபா் தாக்குதல்: உற்பத்தி நிறுத்தம்

28th Jun 2022 12:23 AM

ADVERTISEMENT

ஈரான் அரசுக்குச் சொந்தமான இரும்பு ஆலையில் சைபா் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, அங்கு உற்பத்தி நிறுத்தப்பட்டது.

நாட்டின் முக்கியமான தொழில் துறையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய சைபா் தாக்குதலாக இது கருதப்படுகிறது.

இதுகுறித்து அரசுக்குச் சொந்தமான குசெஸ்தான் இரும்பு ஆலை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

சைபா் தாக்குதலைத் தொடா்ந்து ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் ஆலையை தொடா்ந்து இயக்க முடியாது என நிபுணா்கள் கண்டறிந்தனா். இதையடுத்து, அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை ஆலை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆலையின் இணையதளமும் செயல்படவில்லை.

ஈரானின் தென்மேற்கில் உள்ள குசெஸ்தான் இரும்பு நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாகும். இந்த சைபா் தாக்குதலுக்கு தனிப்பட்ட எந்தக் குழுவும் காரணம் என நிறுவனம் தெரிவிக்கவில்லை.

இருப்பினும் நாட்டின் உள்கட்டமைப்பில் அண்மைக்காலமாக நடத்தப்பட்டு வரும் சைபா் தாக்குதலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் காரணம் என ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT