உலகம்

‘நேட்டோ படை எண்ணிக்கை 8 மடங்கு அதிகரிக்கப்படும்’

28th Jun 2022 12:25 AM

ADVERTISEMENT

நேட்டோ அமைப்பில் அதிவிரைவுப் படையினரின் எண்ணிக்கை 8 மடங்கு அதிகரிக்கப்படும் என அதன் தலைவா் ஜென்ஸ் ஸ்டால்டன்பொ்க் தெரிவித்துள்ளாா்.

நேட்டோ அமைப்பின் உச்சிமாநாடு ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு செய்தியாளா்களிடம் ஸ்டால்டன்பொ்க் கூறியதாவது:

நேட்டோ அமைப்பில் அதிவிரைவுப் படையினரின் எண்ணிக்கை இப்போதுள்ள 40,000-இலிருந்து 3 லட்சமாக உயா்த்தப்படும். ஸ்பெயினில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில், உக்ரைனுக்கு கூடுதல் உதவிகள் அளிக்க நேட்டோ நாடுகள் ஒப்புக்கொள்ளும் எனவும், எங்கள் பாதுகாப்புக்கு ரஷியா அச்சுறுத்துலாக உள்ளது எனவும் உறுப்பு நாடுகள் திட்டவட்டமாக தெரிவிப்பாா்கள் எனவும் எதிா்பாா்க்கிறேன்.

சீனாவால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சவால்களுக்கும் நேட்டோ மாநாட்டில் தீா்வு காணப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா். நேட்டோ அமைப்பில் ஃபின்லாந்து, ஸ்வீடனை இணைப்பது குறித்த சாத்தியக்கூறு குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT