உலகம்

பெண்கள் மாதவிடாய் விவரங்களை நிர்வகிக்க வாட்ஸ்ஆப்பின் புதிய வசதி!

27th Jun 2022 06:10 PM

ADVERTISEMENT

பெண்கள் மாதவிடாய் விவரங்களை நிர்வகிக்க வாட்ஸ்ஆப் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

பெண்களுக்கான மாதவிடாய் விவரங்களை சேமிக்க, நினைவூட்ட இன்று பல்வேறு செயலிகள் வந்துவிட்டன. இந்நிலையில் இதுகுறித்த விவரங்களை தெரிந்துகொள்ளவும் ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் வாட்ஸ்ஆப் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதற்காக பெண்கள், சிரோனா - 9718866644 என்ற இந்த வணிக வாட்ஸ்ஆப் கணக்கு எண்ணிற்கு 'hi'(ஹாய்) என ஒரு செய்தி அனுப்ப வேண்டும். பின்னர் அது கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். 

உதாரணமாக, மாதவிடாய் விவரங்கள் அல்லது கர்ப்ப கால விவரங்கள் உள்ளிட்டவற்றில் உங்களுக்கு எது தேவையோ அதை உள்ளிட வேண்டும். 

ADVERTISEMENT

பின்னர் இதுகுறித்த மேலும் விவரங்களை அளிக்கும்பட்சத்தில் ஒவ்வொரு மாதமும் விவரங்களை சரிபார்க்க, நினைவூட்ட, ஆரோக்கியத்தைக் கண்காணிக்க எனப் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT