உலகம்

எரிபொருள் தட்டுப்பாடு: இலங்கையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி

27th Jun 2022 10:52 PM

ADVERTISEMENT


இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நள்ளிரவு முதல் ஜூலை 10-ம் தேதி வரை அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட வேண்டும் என அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுகாதாரம், பாதுகாப்பு, ஏற்றுமதி துறைகளுக்கு மட்டுமே ஜூலை 10-ம் தேதி எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றார். அரசு நடத்தும் சிலோன் பெட்ரோலிய கார்ப்பரேஷன் இந்தத் துறைகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கவுள்ளது.

இதையும் படிக்கபைடன், ட்ரூடோ, மேக்ரானுடன் பிரதமர் மோடி!

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக அரசின் இந்த முடிவுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் குணவர்தனே, துறைமுகம், விமான நிலையங்கள், சுகாதாரத் துறை, உணவு விநியோகங்கள் மற்றும் வேளாண் ஆகிய துறைகள் அத்தியாவசிய சேவைகளின் கீழ் வரும் என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

அரசு தரப்பில் இந்த முடிவு பற்றி கூறுகையில், "குறைந்த விலையில் ரஷிய எண்ணெய் வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்காக அமைச்சரவைக் குழு ரஷியா செல்லவுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

சுதந்திரம் அடைந்த பிறகு, இதுவரை காணாத மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் இதன் காரணமாக உணவு, மருந்து, சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் என அத்தியாவசியப் பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT