உலகம்

உலகிலேயே அதிகம் பின்தொடர்வோரைக் கொண்டவர் இவர்தான்! காரணம் தெரியுமா?

27th Jun 2022 05:00 PM

ADVERTISEMENT

 

உலகிலேயே அதிக பின்தொடர்வோரைக் (ஃபாலோயர்ஸ்) கொண்ட டிக்-டாக் பிரபலம் என்ற பெருமையை செனகல் நாட்டைச் சேர்ந்த காபே லேம் (Khaby Lame) அடைந்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயதான சார்லி டி அமிலியோ என்பவர் அதிக பின்தொடர்வோரைக் கொண்டவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில், காபே லேம் தற்போது அவரை முந்தியுள்ளார்.

படிக்க கருக்கலைப்பு செய்யனுமா? ஊழியர்களுக்கு சலுகை அறிவித்தது கூகுள்

ADVERTISEMENT

தற்போது இத்தாலியில் வாழ்ந்து வரும் காபே லேம், செனகல் நாட்டைச் சேர்ந்தவர். இத்தாலியில் தொழிற்சாலை ஒன்றில் இயந்திர கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். 

கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா பொதுமுடக்கத்தின்போது அவர் வேலையை இழந்தார். கரோனா கட்டுப்பாடுகளால் அறையிலேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

அப்போது பொழுதுபோக்காக டிக்-டாக் விடியோக்கள் செய்ய ஆரமித்துள்ளார். யூடியூபில் உள்ள பிரபலமான விடியோக்களுக்கு முகபாவனைகள் மூலம் நகைச்சுவை உணர்வுடன் அவர் பதிவிடும் பதில் விடியோக்கள் தற்போது உலகம் முழுக்க ரசிகர்களை ஈர்த்துள்ளது. 

படிக்க 'பிளின்கிட்'நிறுவனத்தை வாங்கிய 'சொமேட்டோ': டெலிவரியில் புதிய வேகம்!

தற்போது அவரை 142.8 மில்லியன் மக்கள் (14 கோடி) பின்தொடர்கின்றனர்.
இதன் மூலம் உலகில் அதிக மக்களால் பின் தொடரப்படுபவர் என்ற பெருமையை அடைந்துள்ளார் காபே லேம். 

இதற்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த சார்லி டி அமிலியோ என்ற 18 வயது பெண் அதிக பின்தொடர்வோரைக் கொண்டிருந்தார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Khaby Lame (@khaby00)

ADVERTISEMENT
ADVERTISEMENT