உலகம்

காத்மாண்டுவில் பானி பூரி விற்கத் தடை: அதிர்ச்சி தரும் காரணம்?

27th Jun 2022 05:40 PM

ADVERTISEMENT

காத்மாண்டு: காத்மாண்டு பள்ளத்தாக்குப் பகுதியில் பானி பூரி விற்பனை செய்ய லலித்பூர் மாநகராட்சி தடை விதித்துள்ளது.

காத்மாண்டு பள்ளத்தாக்குப் பகுதியில், திடீரென காலரா நோய் பரவி வருவதாலும், ஏற்கனவே அங்கு 12 பேருக்கு காலரா உறுதி செய்யப்பட்டிருப்பதாலும் இந்த திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பானி பூரி விற்பனை செய்யவும் விநியோகம் செய்யவும் தடை விதிப்பது என்று லலித்பூர் மாநகராடசி முடிவு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பானி பூரியில் வழங்கப்படும் தண்ணீர் மூலமாக காலரா நோய்க்கிருமிகள் பரவும் அபாயம் இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளத்தாக்குப் பகுதியில் மேலும் காலரா பரவாமல் தடுக்கும் வகையில் கூட்டம் அதிகம் கொண்ட பகுதிகளில் மற்றும் முக்கிய வளாகங்களில் பானிபூரியை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT