லெபனான் நாட்டில் 3 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி மற்றும் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
லெபனானின் வடக்குப் பகுதி கிபித் மாவட்டத்தில் 3 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஒரு குழந்தை பலியாகியுள்ளது. மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக என்என்ஏ தெரிவித்துள்ளது.
கட்டடம் இடிந்ததற்கான காரணம் தெரியவில்லை. மீட்புப் பணிகள் நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ADVERTISEMENT
லெபனானின் பிரதமர் நஜிப் மிகாடி விபத்தில் காயமடைந்தோரை சரியான நேரத்தில் கவனிக்குமாறு உள்ளூர் மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளார்.