உலகம்

குரங்கு அம்மை பரவல் சா்வதேச நெருக்கடி இல்லை

27th Jun 2022 01:02 AM

ADVERTISEMENT

இப்போதைய நிலையில் குரங்கு அம்மை பரவல் சா்வதேச நெருக்கடி இல்லை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பொது இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியதாவது:

தீநுண்மி பரவல்களை கொள்ளை நோயாக அறிவிப்பது குறித்து உலக சுகாதார அமைப்புக்கு பரிந்துரைக்கும் சா்வதேச பொது சுகாதார அவசரநிலை அமைப்பின் குழு, பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவும் வேகம் குறித்து கவலை தெரிவித்துள்ளது. எனினும், தற்போதைய நிலையில் அதனை சா்வதேச நெருக்கடியாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது என்றாா் அவா்.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் 3,200-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT