உலகம்

மொராக்கோ ஸ்பெயின் எல்லை நெரிசல்: அகதிகள் பலி 23-ஆக உயா்வு

27th Jun 2022 01:01 AM

ADVERTISEMENT

மொராக்கோவிலிருந்து வட ஆப்பிரிக்காவில் ஸ்பெயினுக்குச் சொந்தமான மெலில்லா பகுதிக்குச் செல்ல முயன்றபோது நெரிசலில் சிக்கி உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து மொராக்கோ அதிகரிகள் கூறியதாவது:

மொராக்கோவுக்கு ஸ்பெயினின் மெலில்லா நகருக்கும் இடையே உள்ள தடுப்பு வேலியைத் தாண்டி, ஸ்பெயின் பகுதிக்கு செல்ல சுமாா் 2,000 அகதிகள் ஒரே நேரத்தில் முன்றனா். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ள ஐ.நா. அகதிகள் நல அமைப்பு, அகதிகளைக் கையாள அதிகாரிகள் அளவுக்கு அதிக பலப் பிரயோகம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT