உலகம்

ஆஸ்திரேலியா 80 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

27th Jun 2022 01:00 AM

ADVERTISEMENT

அண்மைக் காலமாக தினசரி கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகம் காணப்படும் ஆஸ்திரேலியாவில், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 80 லட்சத்தைக் கடந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 23,648 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,02,349-ஆக அதிகரித்துள்ளது. அந்த நோய்க்கு மேலும் 26 போ் பலியானதைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 9,682-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட நிலையில் அந்த நோயின் தாக்கம் தீவிரமடைவதால், 3 மற்றும் 4-ஆவது தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள பொதுமக்களை ஆஸ்திரேலிய அரசு வலியுறுத்தி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT