உலகம்

ரஷியா மீது இந்தியா அழுத்தம் தர வேண்டும்: அமெரிக்கா

26th Jun 2022 06:00 PM

ADVERTISEMENT

 

ரஷியா மீது இந்தியா அழுத்தம் தர வேண்டும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி முதல் படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா ரஷியாவிடம் எண்ணெய் வாங்குது போருக்கு உதவுவது போன்றதென  ஐரோப்பிய நாடுகள் விமர்சித்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏன் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் இருந்து எரிவாயு வாங்குகிறது? இதற்கு அர்த்தம் ரஷியாவின் போருக்கு ஐரோப்பிய நாடுகள் முதலீடு செய்வதென அர்த்தமாகுமா என கேள்வி எழுப்பினார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: ‘அமெரிக்காவை 150 வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து சென்றுள்ளது நீதிமன்றம்’- நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து

இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 

அமெரிக்கா இந்தியாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. அதேசமயத்தில் இந்தியா ரஷியா மீது சர்வதேச அளவில் அழுத்ததை தர வேண்டும். அமெரிக்க அதிபர் பைடன் புதினுக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடியை கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியா உட்பட எல்லா நாடுகளும் இதில் ஒத்துழைக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT