உலகம்

‘அமெரிக்காவை 150 வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து சென்றுள்ளது நீதிமன்றம்’- நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து

25th Jun 2022 12:37 PM

ADVERTISEMENT


அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு அமெரிக்காவை 150 வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து சென்றுள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைக்கு ஆதரவாக வழங்கப்பட்டு வந்த அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பை முடிவுக்கு கொண்டுவந்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

இதன்மூலம் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூா்வமாக்கிய 50 ஆண்டுகளுக்கு முந்தைய உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்த தீர்ப்புக் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

ADVERTISEMENT

இந்நாள் நாட்டுக்கும் நீதிமன்றத்திற்கும் துக்ககரமான நாள். இந்தத் தீர்ப்பு என்னை திகைக்க வைக்கிறது. நீதிமன்றம் இந்த தீர்ப்பின் மூலம் அமெரிக்க நாட்டை 150 வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து சென்றுள்ளது. ஆனால், இந்த முடிவு கடைசியானதாக இருக்காது.

பெண்களுக்கு தங்கள் குழந்தைகள, கல்வி மற்றும் வேலை மீதான  முடிவெடுக்கும் உரிமைகள் மிகவும் முக்கியமானது மற்றும் அடிப்படையானது. பெண்களுக்கு தங்களது சொந்த உடலின் மீதான முடிவெடுக்கும் உரிமை என்பது சமூகத்தில், குடும்பத்தில், அரசாங்கத்தில் அவர்களது பங்கினையும் குறிப்பதாகும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT