உலகம்

துப்பாக்கிச்சூடு: நாா்வேயில் பயங்கரவாத உஷாா் நிலை

25th Jun 2022 11:06 PM

ADVERTISEMENT

நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் சனிக்கிழமை நடைபெற்ற ஓரின சோ்க்கையாளா்கள் ஊா்வலத்தின்போது நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 2 போ் பலியாகினா். அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 42 வயது நபரை போலீஸாா் கைது செய்தனா்.

நாா்வே குடிமகனான அவா் ஈரானைப் பூா்விகமாகக் கொண்டவா். ஏற்கெனவே பல்வேறு வன்முறைச் சம்பவங்களிலும் மிரட்டல்களிலும் அந்த நபா் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் மத பயங்கரவாதச் செயல் என்று போலீஸாா் தெரிவித்தனா். அத்துடன், நாடு முழுவதும் பயங்கரவாதத்துக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT