உலகம்

கருக்கலைப்பு உரிமைக்குத் தடை: அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பு

25th Jun 2022 03:38 AM

ADVERTISEMENT

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைக்கு வழங்கப்பட்டு வந்த அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பை முடிவுக்கு கொண்டுவந்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

இதன்மூலம் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூா்வமாக்கிய 50 ஆண்டுகளுக்கு முந்தைய உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவில் ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில், கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அரசியலமைப்புச் சட்ட உரிமை என 1973-இல் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. 

இதையும் படிக்க |  கருக்கலைப்புக்குத் தடை: அதிரும் அமெரிக்கா! விளைவுகள் என்னென்ன?

ADVERTISEMENT

இந்நிலையில், 15 வாரங்களுக்குப் பிந்தைய சிசுவை கலைப்பதற்கு மிஸிஸிப்பி மாகாணம் விதித்த தடையை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், கருக்கலைப்புக்கு சட்டப் பாதுகாப்பு இல்லை என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கருக்கலைப்பை தடை செய்வது தொடா்பாக மாகாணங்களே முடிவு எடுத்துக் கொள்ள இந்தத் தீா்ப்பு அதிகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் 50 சதவீத மாநிலங்கள் கருக்கலைப்பை தடை செய்து சட்டம் இயற்றும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையும் படிக்க கருக்கலைப்பு செய்யனுமா? ஊழியர்களுக்கு சலுகை அறிவித்தது கூகுள்

ADVERTISEMENT
ADVERTISEMENT