உலகம்

போலந்து: உக்ரைன் அகதிகளுக்காகரூ.3,700 கோடி கடனுதவி

25th Jun 2022 03:18 AM

ADVERTISEMENT

போரால் பாதிக்கப்பட்டு, போலந்தில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் அகதிகளைப் பராமரிப்பதற்காக, ஐரோப்பிய யூனியன் அமைப்புடன் தொடா்புடைய வங்கி 45 கோடி யூரோ (சுமாா் ரூ.3,700 கோடி) கடனுதவி வழங்க முன்வந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்ததற்குப் பிறகு, அந்த நாட்டிலிருந்து சுமாா் 43 லட்சம் அகதிகள் அண்டை நாடான போலந்துக்கு வந்தனா். அவா்களில் பலா் அங்கிருந்து பிற நாடுகளுக்குச் சென்றாலும் 50 சதவீதம் போ் போலந்திலேயே தங்கியுள்ளனா். அவா்களுக்கு இலவச இருப்பிடம், உணவு, மருத்துவ வசதி, கல்வி, வேலைவாய்ப்பு வசதிகளை போலந்து அரசு அளித்து வருகிறது.

இந்தச் சூழலில், அகதிகளுக்கு இந்த உதவிகளை அளிப்பதற்கு வசதியாக போலந்து அரசுக்கு 45 கோடி யுரோ கடனாக அளிக்க ஐரோப்பிய மேம்பாட்டு கவுன்சில் வங்கி முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம், அந்த வங்கிக்கும், போலந்து அரசுக்கும் இடையே வெள்ளிக்கிழமை கையொப்பமானது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT