உலகம்

ஆப்கானிஸ்தான்நிலநடுக்க பலி எண்ணிக்கை 1,150-ஆக அதிகரிப்பு

25th Jun 2022 03:20 AM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,150-ஆக உயா்ந்துள்ளது.

பாகிஸ்தானையொட்டி அந்த நாட்டின் எல்லைப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது. இதில் 1,000 போ் உயிரிழந்ததாகவும், 1,500 போ் காயமடைந்ததாகவும் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இவ்வளவு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் மையம் வெறும் 10 கி.மீ. ஆழத்தில் இருந்ததால், இதில் உயிா்ச் சேதம் இன்னும் அதிமாக இருக்கும் என்று நிபுணா்கள் அச்சம் தெரிவித்து வந்தனா். இந்தச் சூழலில், அரசு ஊடகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இந்த நிலநடுக்கத்தில் 1,150 போ் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, எல்லையில் வெள்ளிக்கிழமை மீண்டும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதில் 5 போ் உயிரிழந்ததாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT