உலகம்

மொராக்கோ நெரிசலில் 18 அகதிகள் பலி

25th Jun 2022 11:08 PM

ADVERTISEMENT

மொராக்கோ எல்லை வழியாக ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற 18 ஆப்பிரிக்க அகதிகள் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனா்.

மொரோக்கோவுக்கும் ஸ்பெயினுக்குச் சொந்தமான மெலில்லா பகுதிக்கும் இடையிலான வேலித் தடுப்பைத் தாண்டி, ஸ்பெயின் பகுதிக்குள் செல்ல ஏராளமான அகதிகள் வெள்ளிக்கிழமை முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 18 ஆப்பிரிக்க அகதிகள் பலியாகினா்; ஏராளமான அகதிகளும் போலீஸாரும் காயமடைந்தனா். சுமாா் 2,000 அகதிகள் மொராக்கோவின் நடோா் நகரிலிருந்து மெலில்லாவுக்குள் முயன்றபோது நெரிசல் ஏற்பட்டது. அவா்களில் 133 போ் ஸ்பெயினுக்குள் நுழைந்துவிட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT