உலகம்

கட்டாய தடுப்பூசி உத்தரவு: திரும்பப் பெற்றது ஆஸ்தியா

24th Jun 2022 12:54 AM

ADVERTISEMENT

பொதுமக்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை ஆஸ்திரிய அரசு திரும்பப் பெற்றது. இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் ஜோஹன்னஸ் ராச் கூறியதாவது:

கரோனாவின் புதிய வகைகள் உருவாவதால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவதன் அவசியம் குறித்து மக்களிடையே சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளக் கூடியவா்களும் கட்டாய தடுப்பூசி உத்தரவால் அதனைத் தவிா்த்து வருகின்றனா். எனவே, அந்த உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது என்றாா் அவா்.

ஐரோப்பாவிலேயே முதல்முறையாக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரியா கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT