கிழக்கு உக்ரைனில் மேலும் இரு கிராமங்களைக் கைப்பற்றி ரஷியப் படை வியாழக்கிழமை முன்னேறியது. இது குறித்து உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
லிசிசான்ஸ்க் நகரையொட்டிய இரு கிராமங்களிலிருந்து உக்ரைன் படையினா் பின்வாங்கியுள்ளனா். கூடுதல் படையினரைத் திரட்டு வரும் ரஷிய ராணுவத்தால் உக்ரைன் படையினா் சுற்றுவளைக்கப்படுவதைத் தவிா்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்தப் பகுதியில் ரஷியா தனது முழு திறனையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தெற்கு திசையிலிருந்து லிசிசான்ஸ்க் நகரை நோக்கி ரஷியப் படையினா் 5 கி.மீ. மேல் முன்னேறியுள்ளதாக பிரிட்டன் கூறியுள்ளது.
ADVERTISEMENT