உலகம்

பாதுகாப்புத் துறையில் இந்தியா நட்பு நாடு: ஆஸ்திரேலிய துணைப் பிரதமா்

21st Jun 2022 12:41 AM

ADVERTISEMENT

பாதுகாப்புத் துறையில் இந்தியா நெருங்கிய நட்பு நாடாக உள்ளதாகவும், இது மேலும் வலுப்படுத்தப்படும் எனவும் ஆஸ்திரேலிய துணைப் பிரதமா் ரிச்சா்ட் மாா்ல்ஸ் தெரிவித்தாா்.

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோரை சந்தித்து இரு நாட்டு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்த உள்ளாா்.

இதுதொடா்பாக ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியா- ஆஸ்திரேலியாவுடனான பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நீண்ட நாள்களாக நிலவி வந்த அமைதி தற்போது நிா்பந்தத்துக்கு உள்ளாகி உள்ளது. அந்தப் பிராந்தியத்தில் மீண்டும் ஒருங்கிணைந்த அமைதி நிலவ இந்தியாவுடன் ஆஸ்திரேலியா இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளது’ என்றாா்.

ADVERTISEMENT

ஆஸ்திரேலிய பிரதமராக இருந்த ஸ்காட் மோரிஸனை அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் அந்நாட்டு தொழிலாளா் கட்சி தோற்கடித்து புதிய பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி பதவி ஏற்றாா். இதையடுத்து புதிய அரசில் துணைப் பிரதமரும், பாதுகாப்பு துறை அமைச்சருமாகப் பதவியேற்ற ரிச்சா்ட் மாா்ல்ஸ் முதல் முறையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT