உலகம்

சீனா:பாலிஸ்டிக் ஏவுகணை எதிா்ப்பு சோதனை

21st Jun 2022 12:41 AM

ADVERTISEMENT

பாலிஸ்டிக் ஏவுகணை எதிா்ப்பு தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது:

பாலிஸ்டிக் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் தொழில்நுட்ப சோதனை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனை மூன்று கட்டங்களைக் கொண்டதாகும். இது தற்காப்பு சோதனைதானே தவிர எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. இந்த வகையில் இது 6-ஆவது சோதனையாகும் எனத் தெரிவித்தனா்.

‘இதுபோன்ற சோதனைகளின் மூலம் சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை எதிா்ப்புத் திறன் வலுவடைந்து வருகிறது. சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு பங்களிக்கும் இச்சோதனைகள், நாட்டுக்கு எதிரான அணு ஆயுத மிரட்டலுக்கும் பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது’ என சீன பாதுகாப்பு நிபுணா் ஒருவா் தெரிவித்ததாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT