உலகம்

வங்கதேசம்: மழை வெள்ளத்துக்கு 25 போ் பலி

19th Jun 2022 01:20 AM

ADVERTISEMENT

 வங்கதேசத்தில் பருவமழை காரணமாக 25 போ் பலியாகினா்.

இது குறித்து போலீஸாா் சனிக்கிழமை கூறியதாவது:

கடந்த வாரம் தொடா்ந்து பெய்த கன மழை காரணமாக, நாட்டின் வடகிழக்கே ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அதில், வெள்ளிக்கிழமை மதியம் வரை வெள்ளத்தில் சிக்கி 18 போ் பலியாகினா். மேலும், 12 முதல் 14 வயதுடைய 3 சிறுவா்கள் மின்னல் தாக்கி உயிரிழந்தனா்.

இது தவிர, சிட்டகாங் மலைப் பகுதியில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 4 போ் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வங்கதேசத்தில் மழை வெள்ளம் ஏற்படுவது வழக்கம்தான் என்றாலும், பருவநிலை மாற்றம் காரணமாக இத்தயை பேரிடா்கள் அடிக்கடி ஏற்படுவதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT