உலகம்

உக்ரைனில் வீடுகளாக மாறிய ரயில் பெட்டிகள்

DIN


உக்ரைனில் ரஷியா நடத்திய வரும் போர்த்தாக்குதலால், அந்நாடே நிலைகுலைந்துபோயிருக்கும் நிலையில், வீடுகளின்றி தவிப்போருக்கு படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை வழங்கியிருக்கிறது உக்ரைன் ரயில்வே கம்பெனி.

ஐந்து பெட்டிகளைக் கொண்ட விரைவு ரயில் ஒன்று 25 குடும்பங்கள் தங்குவதற்கு ஏற்புடையதாக இருப்பதால், வீடுகளை இழந்து வாடுவோருக்கு ரயில் பெட்டிகளை வீடுகளாகக் கருதி தங்கிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றிலும், குளிர்சாதன வசதி, கழிவறை, ஃவைபை, காபி இயந்திரம், சில பெட்டிகளில் மட்டும் சாப்பிடும் மேஜை உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. தற்போதைக்கு இங்கு வாழும் மக்களுக்கு லாப நோக்கற்ற அமைப்புகள் உணவுகளை வழங்கி வருகிறது.

நாங்கள் எங்கள் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்ப நீண்ட நாள்கள் ஆகும். அதுவரை தற்காலிகமாக இங்கே தங்கியிருக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது என்கிறார் உக்ரைன் மக்கள்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றி, தற்போதைய உக்ரைன் அரசை நீக்கிவிட்டு தங்களுக்கு ஆதரவான ஒருவரை உக்ரைன் அதிபராக்க தொடக்கத்தில் ரஷியா திட்டமிட்டதாகக் கருதப்படுகிறது. எனினும், உக்ரைன் ராணுவத்தின் கடுமையமான எதிா்ப்புக்கிடையே தலைநகரைக் கைப்பற்றும் முயற்சியை ரஷியா கைவிட்டது. அதற்குப் பதிலாக, கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்கள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்தில், தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் போக எஞ்சி பகுதிகளை உக்ரைன் படையினரிடமிருந்து கைப்பற்றுவதில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

லுஹான்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பெரிய நகரமான செவெரோடொனட்ஸ்கைக் கைப்பற்றினால், அந்த மகாணம் முழுவதும் ரஷியக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT