உலகம்

ஏழை நாடுகளைக் கண்டு கொள்ளாதது ஏன்? தடுப்பூசி விநியோகத்தில் ஐநா மெத்தனம்

15th Jun 2022 07:17 PM

ADVERTISEMENT

குரங்கம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசி விநியோகத்தில் பின்பற்றப்படும் அசமத்துவத்தைக் களைய புதிய வழிமுறையை கடைபிடிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 30 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | சீனாவில் கனமழை: 5 லட்சம் பேர் பாதிப்பு

இந்நிலையில் குரங்கு அம்மை நோய்க்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பூசியை விநியோகிப்பதில் சமத்துவமின்மை நிலவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

குறிப்பாக குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட ஏழை மற்றும் வளரும் நாடுகளில் தடுப்பூசி கிடைப்பது அரிதாகி வருவதாகவும், இந்த சிக்கலான சூழலைக் களைய வளர்ந்த நாடுகள் உதவ முன்வர வேண்டும் எனவும் அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் அந்தனோம் கெப்ரியேசஸ் தடுப்பூசி விநியோகத்தில் சீரான நடைமுறையை கொண்டுவர முயற்சித்து வருவதாகத் தெரிவித்தார்.

இதையும் படிக்க | மெக்ஸிகோவில் வாட்ஸ்அப் வதந்தி: அதிகாரி அடித்துக் கொலை

ஆப்பிரிக்க நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகம் செய்வதில் ஐநா ஆர்வம் காட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மேலும் கரோனா பேரிடரில் பின்பற்றப்பட்டு வந்த அதே தவறு தற்போதும் தொடர்வதாகவும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்வதற்கு ஐக்கிய நாடுகள் அவை எந்த நடவடிக்கையையும் பின்பற்றாதது ஏன் எனவும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆப்பிரிக்காவில் இதுவரை 1,500 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT