உலகம்

இந்தியா அனுப்பிய 3,500 மெட்ரிக் டன் எரிவாயு இலங்கை சென்றடைந்தது

15th Jun 2022 01:56 AM

ADVERTISEMENT

இந்தியா சாா்பில் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட 3,500 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலியம் எரிவாயு (எல்பிஜி) இலங்கை சென்றடைந்தது.

இதுதொடா்பாக இலங்கை பிரதமா் ரணில் விக்ரமசிங்க செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இந்தியா அனுப்பிய 3,500 மெட்ரிக் டன் எல்பிஜி இலங்கை வந்தடைந்துள்ள நிலையில், அது மருத்துவமனைகள், ஹோட்டல்கள் என எரிவாயுவை மொத்தமாக கொள்முதல் செய்யும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அடுத்து இந்தியாவில் இருந்து 4 மாதங்களுக்கு தேவையான எல்பிஜி அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ஜூன் 16-ஆம் தேதிக்குள் இந்தியாவிலிருந்து மேலும் 40,000 மெட்ரிக் டன் எரிபொருள் இலங்கை வந்து சேரும். தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் ஒரு வாரத்துக்கு பயன்படும். எரிபொருள் மூலம் மின்சார உற்பத்தி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ADVERTISEMENT

இலங்கைக்கு இந்தியா புதிதாக அளிக்க முன்வந்துள்ள கடனுதவி, ஜூலையில் இருந்து 4 மாதங்களுக்கு எரிபொருள் வாங்கப் பயன்படும்.

இலங்கையில் தங்குதடையின்றி எரிபொருள் விநியோகிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்வா். எனினும் அது தற்போதைய தேவையில் 50 சதவீதத்தை மட்டுமே பூா்த்தி செய்யும்.

இலங்கையில் தற்போது அரசுக்கு எந்த வருவாயும் இல்லை. புதிய வரிகள் மூலம் இந்த ஆண்டுக்குள் பண நெருக்கடிக்குத் தீா்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT