உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்படும் ரஷிய அதிபர் புதினின் சமீபத்திய விடியோ வைரலாகியுள்ளது.
ரஷிய அதிபர் விளாதிமிர் புதினின் உடல்நலம் குறித்து பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன. ரஷிய அதிபர் புதின் புற்றுநோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் சிகிச்சைக்காக அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
இதையும் படிக்க | ஏழை நாடுகளைக் கண்டு கொள்ளாதது ஏன்? தடுப்பூசி விநியோகத்தில் ஐநா மெத்தனம்
இந்நிலையில் மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரஷிய அதிபர் புதினின் விடியோ சமீபத்தில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது. ரஷியத் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் விளாதிமிர் புதின் கால்கள் நடுங்கியபடி நிற்க முடியாமல் சிரமப்பட்ட விடியோ பரவி வருகிறது.
உடல்நல பாதிப்பு காரணமாக புதின் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதன்காரணமாக பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அவர் தவிர்த்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.