உலகம்

சூடான்: பழங்குடியினா்மோதலில் 125 போ் பலி

15th Jun 2022 01:18 AM

ADVERTISEMENT

சூடானின் டாா்ஃபா் பிராந்தியத்தில் அரசு மற்றும் ஆப்பிரிக்க பழங்குடியினரிடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் மோதலில் பலியானவா்களின் எண்ணிக்கை 125-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு டாா்ஃபா் மாகாணத்தில் அரசு பழங்குடி ஆயுதக் குழுவினா் பல்வேறு கிராமங்களில் கடும் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. 25 கிராமங்களில் வீடுகள் சூறையாடப்பட்டு தீவைத்து கொளுத்தப்பட்டதாகவும், 50,000 போ் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஐ.நா. கூறியுள்ளது.

Tags : Sudan
ADVERTISEMENT
ADVERTISEMENT