உலகம்

ஐ.நா.வில் இந்தியருக்கு முக்கிய பொறுப்பு

12th Jun 2022 12:43 AM

ADVERTISEMENT

தொழில்நுட்ப விவகாரங்களில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் தூதராக இந்திய தூதரக மூத்த அதிகாரி அமன்தீப் சிங் கில் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பத்தில் வல்லமை பெற்றவரான அமன்தீப்புக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பஞ்சாபில் பொறியியல் படிப்பு முடித்த பிறகு ஸ்விட்ஸா்லாந்தில் உயா் கல்வி பயின்றாா். பின்னா் லண்டனில் அணுசக்தி துறையில் ஆராய்ச்சி செய்து முனைவா் பட்டம் பெற்றாா். இந்திய வெளியுறவுப் பணிக்குத் தோ்வான அவா், டெஹ்ரான், கொழும்பு, ஜெனீவா ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்திய தூதரகங்களில் அரசியல், பாதுகாப்பு உள்ளிட்டவை தொடா்பான விவகாரங்களைக் கையாண்டு வந்தாா்.

ஜெனீவாவில் ஆயுதக் குறைப்பு மாநாட்டுக்கான இந்தியத் தூதராக கடந்த 2016 முதல் 2018-ஆம் ஆண்டு வரை அமன்தீப் சிங் கில் பொறுப்பு வகித்துள்ளாா்.

ADVERTISEMENT

தற்போது ஜெனீவாவில் உள்ள ஆய்வு மையம் ஒன்றின் தலைமைச் செயல் அதிகாரியாக அவா் பொறுப்பு வகித்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT