உலகம்

நைஜீரியா: 32 பேர் சுட்டுக்கொலை

10th Jun 2022 01:11 PM

ADVERTISEMENT

 

நைஜீரியாவில் உள்ள கடுனா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 32 பேர் பலியாகினர். 

சமீப காலமாக நைஜீரியாவில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்களும் ஆள் கடத்தலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடுனா மாகாணத்தைச் சேர்ந்த கஜுரா கிராமத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 32 பேர் உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த  ஞாயிற்றுக் கிழமை  கத்தோலிக்க தேவாலயத்தில் மா்ம நபா்கள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 50 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT