உலகம்

சீனா: மழை, வெள்ளத்துக்கு 17 போ் பலி

10th Jun 2022 03:10 AM

ADVERTISEMENT

 

பெய்ஜிங்: சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹுனான் மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 17 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஹுனானில் இந்த மாதத் தொடக்கம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சில கண்காணிப்பு நிலையங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக குவாங்ஸி பிராந்தியத்தில் பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

இதில் 17 போ் உயிரிழந்தனா்; 4 போ் மாயமாகினா். பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 2.86 லட்சம் போ் வெளியேற்றப்ப்டடு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT