உலகம்

மக்கள் தொகையில் சீனத்துக்கு வந்த சோதனை: ஒருவேளை இப்படியாகுமோ?

10th Jun 2022 04:54 PM

ADVERTISEMENT

பெய்ஜிங்: மக்கள் தொகையில், உலகளவில் முதலிடத்தில் இருக்கும் சீனத்தில் தற்போது மக்கள் தொகை வளர்ச்சி சரிவில் சென்று கொண்டிருப்பதால், தம்பதிகளை வலுக்கட்டாயமாக குழந்தை பெற்றுக்கொள்ள நிர்பந்திக்கும் நிலை ஏற்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை சீன அரசு கடைபிடித்து வந்தது. ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற அளவில் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு, பிறகு அதனை தளர்த்திக் கொண்டது.

இதையும் படிக்க.. பி.எஃப். கணக்கில் எவ்வளவு இருக்கிறது? வீட்டிலிருந்தே அறியலாம்

இந்த நிலையில், மக்கள் தொகை வளர்ச்சி சரிவை சந்தித்திருப்பதால், எதிர்காலத்தில், தேவையான தொழிலாளர்கள் கிடைப்பது அபாயகரமான அளவை எட்டும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால், மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில், சீனர்கள் விரைவாக திருமணம் செய்து கொள்ளவும், ஒரு தம்பதி குறைந்தது மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சீன அரசு வலியுறுத்தத் தொடங்கிவிட்டது.

இது மட்டுமல்ல, மக்கள் தொகைப் பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், சில மாகாணங்களில் போட்டிகள் கூட நடத்தத் தொடங்கிவிட்டன.

ஆனால், கரோனா மற்றும் பொதுமுடக்கம் காரணமாக, தங்களது நிலையில்லாத பொருளாதார வாழ்க்கையில், மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க முடியாமல், தங்களது வாழ்க்கையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் என்பதால் அரசின் இன்று திடீர் கொள்கை முடிவுக்க ஏராளமான சீனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், கடந்த காலத்தைக் காட்டிலும் கடந்த 10 ஆண்டுகளில் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதும், குழந்தை பிறப்பும் வெகுவாகக் குறைந்திருப்பதை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்று தெரியாமல் சீன அரசு குழப்பத்தில் உள்ளது. இதனால், தம்பதிகளை 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்கும் நிலைக்கு சீன அரசு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT