உலகம்

சிலி: 58 ஆயிரத்தை கடந்த கரோனா பலி

10th Jun 2022 03:36 AM

ADVERTISEMENT

 

சான்டியாகோ: சிலியில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தைக் கடந்தது. இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 8 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 58,005-ஆக அதிகரித்துள்ள.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 10,618 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இத்துடன், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 37,71,509-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 35,23,377 போ் குணமடைந்தனா்; 2,019 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT