பொ்லின்: ஜொ்மனியில் 130-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு அந்த நோய்க்கு எதிரான தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு சுகாதார நிபுணா் குழு பரிந்துரைத்துள்ளது.
எனினும், அத்தகைய தடுப்பூசிகளின் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால், குரங்கு அம்மை தொற்று அபாயம் நிறைந்தவா்களுக்கு மட்டும் அந்தத் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று நிபுணா் குழு பரிந்துரைத்துள்ளது.
பாலியல் ரீதியில் புதியவா்களுடன் நெருங்கிப் பழகுவோருக்கு அந்த நோய்த்தொற்று அபாயம் அதிகமிருப்பதாகவும், இதுவரை அந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் அந்த வகையைச் சோ்ந்தவா்கள் எனவும் கூறப்படுகிறது.
ADVERTISEMENT