உலகம்

எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் பசில் ராஜபட்ச

9th Jun 2022 12:17 PM

ADVERTISEMENT

இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபட்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால், நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபட்ச அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருந்தார்.

தொடர்ந்து, அமைச்சரவை கலைக்கப்பட்டதுடன், பிரதமர் மகிந்த ராஜபட்சவும் ராஜிநாமா செய்தார். இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.

இந்நிலையில், பசில் ராஜபட்ச இன்று தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT