உலகம்

வடகொரிய வான்வெளியில் தென்கொரிய போர் விமானங்கள்

7th Jun 2022 05:14 PM

ADVERTISEMENT

சமீபத்தில் வடகொரியாவில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனைக்கு பதிலளிக்கும் விதமாக தென்கொரியா மற்றும் அமெரிக்கா தங்களது போர் விமானங்களை வடகொரியாவின் வான்வெளியில் இயக்கியுள்ளது.

வட கொரிய வான்வெளியில் தென்கொரியாவின் எஃப்-35  மற்றும் அமெரிக்காவின் எஃப்-16 போர் விமானங்கள் உட்பட கிட்டத்தட்ட 20 போர் விமானங்கள் மஞ்சள் கடலின் மேலே பறந்துள்ளன. எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்காக இந்த பயிற்சி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் உறுதியான கூட்டமைப்பு வடகொரியாவின் எந்த ஒரு அச்சுறுத்தறுத்தலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை வடகொரியா குறுகிய தொலைவில் சென்று தாக்கக் கூடிய 8 ஏவுகணைகளை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட அரை மணி நேரம் சோதித்தது. இந்த ஏவுகணை சோதனை வடகொரியாவில் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ஒன்றாக கூறப்படுகிறது.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு பதிலளிக்கும் விதமாகவே அந்த நாட்டின் வான்வெளியில் போர் விமானங்கள் பறந்தது பார்க்கப்படுகிறது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT