உலகம்

கரோனா: உலகளவில் பாதிப்பு 53. 54 கோடியாக அதிகரிப்பு

6th Jun 2022 08:24 AM

ADVERTISEMENT


வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53.54 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறப்புகள் எண்ணிக்கை 63,20,401-ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 53.54,31,115-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 63,20,401போ் உயிரிழந்துள்ளனர்.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 506,405,250 போ் பூரண குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 27 லட்சத்து 5 ஆயிரத்து 464 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 36,650 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 8,65,22,561 -ஆகவும் பலி எண்ணிக்‍கை 10,33,591-ஆகவும்,  குணமடைந்தோர் எண்ணிக்கை 8,25,84,531-ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 4,31,81,113    -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,24,692     பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,11,53,765 -ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 6,67,056 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இதையும் படிக்க | உக்ரைனுக்கு மேலை நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் அழிப்பு’

ADVERTISEMENT
ADVERTISEMENT