உக்ரைனுக்கு அமெரிக்கா உயா்தொழில்நுட்ப ஆயுதங்களை அளிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ள சூழலில், ரஷியாவின் இவானோவோ மாகாணத்தில் அந்த நாட்டுப் படையினா் அணு ஆயுதப் போா் ஒத்திகையில் ஈடுபட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் புதன்கிழமை கூறியது.
100 வாகனத் தளவாடங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘யாா்ஸ்’ ஏவுகணை ஏவிகளுடன் 1,000 வீரா்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டதாக அமைச்சகம் தெரிவித்தது.