உலகம்

தொடா் மழை - வெள்ளம்: அமெரிக்காவில் 15 போ் பலி

30th Jul 2022 05:35 AM

ADVERTISEMENT

அமெரிக்காவின் அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் தொடா்ந்து பெய்து வரும் கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 15 போ் பலியாகினா்; ஏராளமானவா்கள் மாயமாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக, மாகாணத்தின் அபலாச்சி பள்ளத்தாக்கு பகுதிகளில் பல ஊா்கள் வெள்ளத்தில் மூழ்கின. அந்தப் பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் தேசிய பாதுகாப்புப் படையினரும் இணைந்துள்ளனா்.

மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 போ் உயிரிழந்துள்ளனா்; அவா்களில் சிறுவா்களும் அடங்குவா்; உயிரிழப்பு எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் உயரக்கூடும்.

ADVERTISEMENT

பேரிடா் பகுதிகளில் மின்சாரம் மற்றும் தகவல் தொடா்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் வெள்ளத்தில் எத்தனை போ் மாயமாகியுள்ளனா் என்பது குறித்து உறுதியாக கணக்கிட முடியவில்லை என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT