உலகம்

உலகளவில் 18,000 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு

28th Jul 2022 01:13 PM

ADVERTISEMENT

உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இதுவரை 78 நாடுகளில் உலக சுகாதார அமைப்பிற்கு 18 ஆயிரத்திற்கும் அதிகமான குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகளவில் பரவி வருகிறது. இந்த பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் 70 சதவீதமும், 25 சதவீதம் அமெரிக்காவிலும் பாதிவாகியுள்ளது.

குரங்கு அம்மை பாதிப்புக்கு இதுவரை 5 சதவீதம் பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 4 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: 'ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மன்னிப்பு கேட்டுவிட்டார்' - சோனியா காந்தி

உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் அதிகமாக பரவ தொடங்கி  இருப்பதால், தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அதானோம் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT