உலகம்

மகிந்த ராஜபட்ச, பசில் ராஜபட்ச ஆக. 2 வரை இலங்கையை விட்டு வெளியேறத் தடை!

27th Jul 2022 03:38 PM

ADVERTISEMENT

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபட்ச ஆகிய இருவரும் இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி சூழலுக்கு இடையே அங்கு அரசியல் குழப்பங்களும் இருந்து வருகின்றன. தற்போது புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்தன தேர்வாகியுள்ளார். 

இந்நிலையில், இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச, முன்னாள் நிதியமைச்சரும் மகிந்த ராஜபட்சவின் சகோதரருமான பசில் ராஜபட்ச ஆகிய இருவரும் இலங்கையை விட்டு வெளியேற இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. 

இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில் தடையை ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

ADVERTISEMENT

இதையும் படிக்க | கோத்தபய ராஜபட்சவின் விசா காலம் நீட்டிப்பு: சிங்கப்பூா் அரசு 

ADVERTISEMENT
ADVERTISEMENT