உலகம்

சுரங்கப் பணியில் கிடைத்த உலகின் மிகப்பெரிய வைரம்! எந்த நாட்டில்?

27th Jul 2022 04:27 PM

ADVERTISEMENT

 

மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள அங்கோலா பகுதியில் இளஞ்சிவப்பு நிற வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் கனிமங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 300 ஆண்டுகளில் கிடைத்த மிகப்பெரிய இளஞ்சிவப்பு நிற வைரம் இது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

170 காரட் மதிப்புடைய இந்த இளஞ்சிவப்பு நிறமுடைய வைரம் தற்போது அங்கோலா நாட்டின் கண்காட்சியில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

படிக்ககாங்கோ வன்முறை: இந்திய ராணுவத்தினர் இருவர் கொலை

மத்திய ஆப்பிரிக்காவின் அங்கோலா நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனிமங்களை வெட்டி எடுக்கும் சுரங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அந்தவகையில், லுலோ பகுதியில் நடைபெற்று வரும் லுகாபா வைர நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கப் பணிகளில் இளஞ்சிவப்பு நிற வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 170 காரட் என கணக்கிடப்பட்டுள்ளது. 

உலகில் கடந்த 300 ஆண்டுகளில் கிடைத்த மிகப்பெரிய இளஞ்சிவப்பு நிற வைரம் இது என ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
லுலோ பகுதியில் கண்டெடுக்கப்பட்டதால், லுலோ ரோஸ் என இந்த வைரத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த இளஞ்சிவப்பு நிற வைரம் அங்கோலாவில் கண்காண்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT