உலகம்

உலகளவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 55.57 கோடியாக அதிகரிப்பு!

7th Jul 2022 11:34 AM

ADVERTISEMENT

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55.57 கோடியாக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 63.66 லட்சமாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது சற்று குறைந்த வண்ணம் இருப்பது மக்களிடையே நிம்மதியை அளித்துள்ளது. தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மக்கள் கடைப்பிடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: ‘சென்னையில் விளையாடுவதை காண காத்திருக்கிறேன்’: தோனிக்கு ஸ்டாலின் வாழ்த்து

எனினும், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 55,71,78,217 ஆக அதிகரித்துள்ளது. அவா்களில்  63,66,079 போ் உயிரிழந்துள்ளனர். மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 53,12,46,998 போ் பூரண குணமடைந்துள்ளனர். மேலும் 37,527 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT