உலகம்

புதிய வகை கரோனா கண்டுபிடிப்பு: உலக சுகாதார நிறுவனம்

7th Jul 2022 12:04 PM

ADVERTISEMENT

ஜெனீவா: ஓமிக்ரான் மாறுபாட்டின் புதிய வகை கரோனா  BA.2.75 இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

கரோனாவால், கடந்த இரண்டு வாரங்களில் உலகளவில் பதிவான வழக்குகள் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது கெப்ரேயஸ் கூறினார்.

இதையும் படிக்க: உலகளவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 55.57 கோடியாக அதிகரிப்பு!

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், BA.4 மற்றும் BA.5 புதிய அலைகள் எழுந்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் BA.2.75 இன் புதிய துணை வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நாம் இன்னும் தொற்றுநோய்க்கு மத்தியில் இருக்கிறோம். நோய்க்கிருமிக்கு நிறைய சக்தி உள்ளது. எனவே BA.4 அல்லது BA.5 அல்லது BA.2.75 ஆக இருந்தாலும் நோய்க்கிருமி தொற்று தொடரும் என்று  உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும். மக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று கெப்ரேயஸ் கூறினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT