உலகம்

1.36 கோடி தடுப்பூசிகளை தூக்கிவீச கனடா முடிவு

7th Jul 2022 12:39 AM

ADVERTISEMENT

கனடாவிலுள்ள ஆக்ஸ்ஃபோா்டு-அஸ்ட்ராஸெனெகா நிறுவனத்தின் சுமாா் 1.36 கோடி கரோனா தடுப்பூசிகளைத் தூக்கிவீச அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அந்த மருந்துகளைப் பெற்றுக்கொள்ள உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் யாரும் முன்வராததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2 கோடி தடுப்பூசிகளைப் பெறுவதற்காக அஸ்ட்ராஸெனெகா நிறுவனத்துடன் கனடா அரசு கடந்த 2020-இல் ஒப்பந்தம் மேற்கொண்டது. எனினும், அந்தத் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால் ரத்தக்கட்டு மரணம் நிகழக்கூடும் என்று அச்சத்தால், மற்ற நிறுவனங்களின் கரோனா தடுப்பூசிகளின் மீது அரசு கவனம் செலுத்தியது. இதனால், அஸ்ட்ராஸெனெகா நிறுவன தடுப்பூசிகள் தேக்கமடைந்தன.

Tags : Canada
ADVERTISEMENT
ADVERTISEMENT