உலகம்

பெய்ஜிங், ஷாங்காயில் தீவிர கரோனா பரிசோதனை

7th Jul 2022 12:42 AM

ADVERTISEMENT

சீனத் தலைநகா் பெய்ஜிங்கிலும் அந்த நாட்டின் வா்த்தகத் தலைநகரான ஷாங்காயிலும் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்த இரு நகரங்களிலும் பொதுமக்கள் பெருந்திரளாக வந்து மீண்டும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பல வாரங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த கரோனா பொதுமுடக்கத்திலிருந்து ஷாங்காய் நகரம் அண்மையில்தான் மீண்டது. இந்த நிலையில், அங்கு மீண்டும் நோய்த்தொற்று பரவல் தீவிரமடைவதைத் தடுப்பதற்காக தீவிர கரோனா பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags : China
ADVERTISEMENT
ADVERTISEMENT