உலகம்

உக்ரைன் போரில் இதுவரை 346 குழந்தைகள் உயிரிழப்பு

7th Jul 2022 11:38 AM

ADVERTISEMENT

 

உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 346 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். 

பிப்ரவரி 24 அன்று கியேவ் மீது ரஷிய படைகள் தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கியது. அதுமுதல் இன்று வரை மொத்தம் 346 குழந்தைகள் பலியாகியுள்ளனர். மேலும் 645 குழந்தைகள் காயமடைந்துள்ளதாக உக்ரைனிய தகவல்கள் தெரிவிக்கின்றது. 

மேலும்,  இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை இறுதியானது கிடையாது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தரவுகளைத் திரட்டும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்கலாம்: சென்னையில் முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

ரஷிய படைகள் நடத்திய தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் 2,108 கல்வி நிறுவனங்கள் சேதடைந்துள்ளன. அவற்றில் 215 முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. 

அதுமட்டுமின்றி போரிலிருந்து தப்பிச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல குழந்தைகள் குடும்பப் பிரிவினை, வன்முறை, துஷ்பிரயோகம், பாலியல், கடத்தல் போன்ற ஆபத்துக்களில் சிக்கியுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT