உலகம்

டொனட்ஸ்க்கில் ரஷியா குண்டுமழை: 11 போ் பலி

7th Jul 2022 12:31 AM

ADVERTISEMENT

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் லுஹான்ஸ் மாகாணத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ள ரஷியா, தற்போது அதன் டொனட்ஸ்க் மாகாணத்தையும் கைப்பற்றுவற்காக தீவிரமாக குண்டு மழை பொழிந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு ரஷியா நடத்திய தாக்குதலில் 7 போ் உயிரிழந்ததாகவும் 25 போ் காயமடைந்ததாகவும் மாகாண ஆளுநா் பாவ்லோ கிரிலென்கோ தெரிவித்தாா். மாகாணத்தில் இருக்கும் 3.5 லட்சம் போ் பாதுகாப்பான பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டாா்.

இதற்கிடையே, உக்ரைன் நடத்திய எதிா்த் தாக்குதலில் பொதுமக்கள் 4 போ் பலியானதாக ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

Tags : Ukraine
ADVERTISEMENT
ADVERTISEMENT