உலகம்

காளி போஸ்டர் சர்ச்சை: வருத்தம் தெரிவித்த அருங்காட்சியகம்; ஆவணப்படம் நீக்கம் 

6th Jul 2022 02:40 PM

ADVERTISEMENT


டொரண்டோ: ஹிந்து மற்றும் இதர ஹிந்து நம்பிக்கைக் கொண்டவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டதற்கு வருந்துகிறோம், காளி ஆவணப்படம் திரையிடப்படுவதிலிருந்து நீக்கப்படுவதாக ஆகா கான் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய ஆவணப்படம் மற்றும் அது தொடர்பான போஸ்டர் என அனைத்தையும் நீக்குமாறு, ஒட்டாவாவின் இந்திய தூதரகம் கனடா நாட்டு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹிந்துக்கள் போற்றி வணங்கும் பெண் தெய்வமான காளியின் சா்ச்சைக்குரிய திரைப்பட போஸ்டா்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கனடா அதிகாரிகளிடம் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியிருந்தது.

மதுரையைச் சோ்ந்தவா் லீனா மணிமேகலை. கனடாவில் வசித்து வருகிறாா். அவா் இயக்கிய ‘காளி’ என்ற ஆவணப் படத்தின் போஸ்டரை தனது ட்விட்டா் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்டாா். அந்தப் போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகைபிடித்துக் கொண்டு ஓரினச் சோ்கையாளா்கள், இருபாலினத்தவரிடமும் உறவு கொள்பவா்கள், மூன்றாம் பாலினத்தவா் உள்ளிட்டோரைக் குறிக்கும் கொடியை ஏந்தியிருப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க.. 'காளி’ போஸ்டர்: இந்து மத உணர்வாளர்கள் இயக்குநர் லீனா மணிமேகலை மீது புகார்

இந்தப் படம் குறித்து லீனா மணிமேகலை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், கனடாவில் உள்ள டொராண்டோ மாநகரில் காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடைபெறும் சம்பவங்களைக் கற்பனையாக சித்திரித்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.

இந்த போஸ்டா் பெரும் சா்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்தப் படத்தின் போஸ்டரில் காளியை சித்திரித்துள்ள விதம் மத உணா்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுதொடா்பாக லீனா மீது கெள மகாசபை என்ற குழுவைச் சோ்ந்த ஒருவா் தில்லி காவல்துறையிடம் புகாா் அளித்துள்ளாா்.

இந்நிலையில், கனடா தலைநகா் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஆவணப் பட போஸ்டரில் காளியை மரியாதைக் குறைவாக சித்திரித்துள்ளது குறித்து கனடாவில் வசிக்கும் ஹிந்து சமூகத் தலைவா்களிடம் இருந்து புகாா்கள் வந்துள்ளன. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளை பல ஹிந்து அமைப்புகள் அணுகியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே ஆத்திரமூட்டும் போஸ்டா்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கனடா அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. காளி ஆவணப்படம்: புகையிலை கட்டுப்பாட்டு அமைப்பு கண்டனம்

இந்திய தூதரகத்திலிருந்து வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆகா கான் அருங்காட்சியகத்தின் சுட்டுரைப் பக்கத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது. காளி போஸ்டர் சர்ச்சை விவகாரத்தில் "மிகவும் வருந்துகிறோம்" என்றும், ஹிந்து மற்றும் இதர ஹிந்து மத நம்பிக்கைக் கொண்டவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் தெரியாமல் தவறு நடந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொரண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம், மாணவர்களில் பல்வேறு இனத்தவர் மற்றும் பல கலாசார பின்னணி கொண்டவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது. ஒவ்வொரு மாணவர்களும், தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில், கனடாவின் பலகலாசார ஒருங்கிணைப்பு திட்டமான 'ஒரே குடையின் கீழ்' என்ற திட்டத்தில் 18 ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.

டொரண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தின் ஆவணப்படங்கள் ஆகா கான் அருங்காட்சியகத்தில் ஜூலை 2ஆம் தேதி திரையிடப்பட்டது. கலை மற்று வசனங்களின் வழியாக, கலாச்சார ஒருமைப்பாட்டை உருவாக்குவதே இந்த அருங்காட்சியகத்தின் நோக்கமாக இருந்தது.

பல்வேறு மதத்தின் நம்பிக்கைகளை மதிப்பது மற்றும் பல மத நம்பிக்கைக் கொண்ட சமுதாயங்களை ஒன்றிணைப்பதும் இதன் நோக்கம். எனவே, இந்த ஆவணப்படம் இனி அருங்காட்சியகத்தில் திரையிடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. காளி தெய்வத்தின் சா்ச்சைக்குரிய படத்தை அகற்ற வேண்டும்: கனடாவின் இந்திய தூதரகம் வலியுறுத்தல்

டொரண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தின் 'ஒரே குடையின் கீழ்' திட்டத்தில் திரையிடப்பட்ட காளி ஆவணப்படம், இந்து தெய்வத்தை அவமரியாதை செய்யும் வகையில் இருப்பதாக கனடாவில் வாழும் இந்து மதத் தலைவர்கள் குற்றம்சாட்டியிருப்பதாக, ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் கூறியிருந்த நிலையில், ஆகா கான் அருங்காட்சியகம் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

டொரண்டோவுக்கான இந்திய தூதர், காளி சர்ச்சை விவகாரம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எடுத்துரைத்தார். 

டொரண்டோ இந்திய தூதரகம் இது பற்றி கூறியிருப்பதாவது, ஏராளமான இந்து அமைப்புகள் கனடாவில் உள்ள அதிகாரிகளை இது தொடர்பாக தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தன. 

இதையடுத்து, காளி போஸ்டர் தொடர்பான அனைத்தையும் நீக்குமாறு கனடாவின் அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கோரப்பட்டது. 

இதையும் படிக்க.. போஸ்டர்களை அகற்றாவிட்டால் 'காளி' படத்துக்கு தடை விதிக்கப்படும்: ம.பி. அமைச்சர் 

லீனா மணிமேகலை இயக்கியிருக்கும் இந்த காளி ஆவணப்படத்தின் போஸ்டர் சர்ச்சையானதைத் தொடர்ந்து அவர் கூறியிருப்பதாவது, ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தா அரெஸ்ட் லீனா மணிமேகலை என்று ஹேஷ்டேக் போடாம லவ் யூ லீனா மணிமேகலை என்று ஹேஷ்டேக் போடுவாங்க என்று கூறியிருந்தார்.

 

போஸ்டர் சர்ச்சை குறித்து பதிலளிக்கும் வகையில் அவர் பதிவிட்டிருந்ததாவது,  "எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

லீனா மணிமேகலை 2021ஆம் ஆண்டு இயக்கிய "மாடதி - என் அன்ஃபெய்ரி டேல்" என்ற திரைப்படம் மத ரீதியிலான சர்ச்சையை எழுப்பியிருந்தது. மத ரீதியிலான சர்ச்சைக்குள் சிக்கும் திரைப்பட இயக்குநர் இவர் மட்டுமல்ல, ஏராளமானோர் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கி பெரும்புகழ் சேர்த்தனர்.

அவர்களில், 2017ஆம் ஆண்டு, இயக்குநர் சனல் குமார் சசிதரன் இயக்கிய மலையாள திரைப்படம் "செக்ஸி துர்கா" திரைப்படம் கேரளத்தில் சர்ச்சையை உருவாக்கிய நிலையில், அந்தப் படத்தின் பெயர் "எஸ் துர்கா" என்று மாற்றப்பட்டது.

கடந்த ஆண்டு கூட, பிரைம் விடியோவில் வெளியான "தாண்டவ்" படத்தில் கல்லூரி நாடகத்தில் இறைவன் சிவபெருமானை சித்தரிக்கும் காட்சி சர்ச்சையாக இருந்ததால், படத்திலிருந்து அந்தக் காட்சி நீக்கப்பட்டு, நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரப்பட்டது.

சர்ச்சைக்குரிய "காளி" திரைப்படம், இன்னும் இந்திய பார்வையாளர்களுக்கு திரையிடப்படவில்லை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT